Close
நவம்பர் 25, 2024 12:37 காலை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் தொடர் வாசிப்பு இயக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்

மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் தொடர் வாசிப்பு இயக்கம் நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வீரமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் ஜெயராம் அனைவரையும் வரவேற்றார்.  மாவட்ட செயலாளர் முத்துக்குமார் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.

மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் மாணிக்கத்தாய் ஆகியோர் பேசினர்.

அறிவியல் இயக்க பணிகளை விளக்கி மாநில பொதுக் குழு உறுப்பினர் மணவாளன் பேசினார். இதில் தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளர் அண்டனூர் சுரா, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ரா.இராமதிலகம், அ.கமலம், துளிர் அறிவியல் தேர்வு இணை ஒருங்கிணைப்பாளர்கள் க.ஜெயராம், சாமி கிருஷ், அ.ரஹமதுல்லா ஆகியோருக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ராஜ்குமார் கலந்துகொண்டு அறிவியல் இயக்கம் இதுவரை செய்து வந்த சாதனைகள் பற்றி பேசினார். துளிர் அறிவியல் விழிப்புணர்வு தேர்வை சிறப்பாக நடத்திய ஒன்றிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் விதமாக பிரசார பயணங்களை மேற்கொள்வது எனவும் 2000 உறுப்பினர்களை அறிவியல் இயக்கத்தில் சேர்ப்பது,  அறிவியல் இயக்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் 2.4.2023 ஞாயிறன்று ஒரு நாள் நிகழ்வாக சிறப்பாக நடத்துவது எனவும் ஏப்ரல் 23 -ல் வரும் சர்வதேச புத்தக தினத்தை ஒட்டி ஏப்ரல் மாதம் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் தொடர் வாசிப்பு இயக்கத்தை நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் துணைத் தலைவர்கள் க.சதாசிவம், ஈ.பவனம்மாள், இணைச் செயலாளர்கள் ஆ.கமலம், சை.மஸ்தான் பகுருதீன், வட்டார நிர்வாகிகள் குமரேசன், சிவானந்தம், ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் சு.மதியழகன், சுப்ரமணியன், ரட்சகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக மாவட்ட பொருளாளர் விமலா அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top