செயற்கை மணல் உற்பத்தி செய்ய தனிப்பட்ட குவாரி ஒப்பந்தங்கள் வழங்கப்பட மாட்டாது என்ற தமிழக அரசின் அறிவிப்பால் தமிழகத்தில் 50 லட்சம் கட்டுமான சார்ந்தவர் பயன்பெறுவர் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நலச் சம்மேளன தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் சாமிநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் மூலம் தமிழகத்தில் 50 லட்சம் பேரும், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் கட்டுமான துறையினர் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் சீர்கெட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. ஆறுகளை, குளங்களை, கன்மாய்களை செம்மைப்படுத்த தூர் வாரும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலமாக மணல் திட்டுக்களை அகற்றுகின்ற முறையில் ஆங்காங்கு புதிய குவாரிகளை கண்டறிந்து அதை சார்ந்த தொழிலாளர்களுக்கும் அதனைச் சார்ந்துள்ள கட்டிட மூலப்பொருட்கள் விற்பவர்கள் மற்றும் பல லட்சம் தொழிலா ளர்களுக்கும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.
மேலும் கடந்த ஆட்சியில் எம்.சாண்டுக்கு மாறும்படி பொது மக்களையும் கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கும் அழைப்பு விடுத்தார்கள். சரியாக சொல்ல வேண்டுமென்றால் 346 எம்.சான்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் பொதுப்பணித்துறை மூலம் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.
2000 -க்கும் மேற்பட்ட கிரஷர்கள் அப்படி இருந்தாலும் தரமான எம்.சான்ட் கிடைத்ததா என்றால் அவை 10- விழுக்காடு மட்டுமே முக்கிய பயன்பாட்டிற்கு வழங்கினார்கள். மற்றவை முழுக்க முழுக்க கலப்படமாக இருந்தது.
உற்பத்தியாளர்கள் வாகனங்கள் மூலமாக எம்.சான்ட் விற்பனையை டன் ஒன்றுக்கு ரூ.600-ஆகவும், எங்களை போன்ற லாரிக்காரர்கள் எம்.சான்ட் வாங்கினால் டன் ஒன்றுக்கு ரூ.650- வீதம் கொடுக்கிறார்கள். இதனால் போட்டிப் போட்டு இந்த தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.
காடுகளையும் மலைகளையும் அழித்து கருங்கல் ஜல்லி வகை மற்றும் எம்.சான்ட் வகைகளை தயாரிப்பதன் மூலமாக இயற்கையான காடுகளை மலைகளை அழிப்பதைவிட, பல ஆயிரம் ஏக்கர்கள் விளைநிலம் பாதிக்கப்பட்டது. எங்களின் ஆலோசனைகளை பரிசீலிப்பதுடன் அவற்றை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அதனை நடைமுறைப்படுத்தும்போது ஆற்று மணல் மற்றும் எம்.சாண்ட் போன்ற கனிமத்தை கட்டிடம் கட்டுவதற்கு அத்தியாவசிய மூலப்பொருட்கள் பட்டியலில் சேர்த்து பொதுமக்களுக்கு தரத்தை உறுதிசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் தலைமையில் கனிமவளத்துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, ஆய்வுக்குழுவினை அமைத்து மாதம் இருமுறை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எம் சாண்ட் குவாரிகளில் நடைபெறும் ஊழல் குறித்தும் எம் சாண்ட் குவாரிகளில் தரமான எம்சாண்ட் வழங்க வேண்டும்.
தரமற்ற எம்சாண்ட் குவாரிகளையும் காலாவதியான எம்சாண்ட் குவாரிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள எம்சாண்ட் குவாரி களில் தரமான எம்சாண்ட் வழங்க ஒரு குழுஅமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்பி இருந்தோம்.
கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் ஒரு குழு அமைத்து தரமான எம்சாண்ட் வழங்குவது என்றும் செயற்கை மணல் உற்பத்தி செய்வதற்காக தனிப்பட்ட குவாரி ஒப்பந்தங்கள் எதுவும் தரப்பட மாட்டாது என்று தமிழக முதல்வர் அறிவித் துள்ளார். இந்த அறிவிப்பால் மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் மூலம் தமிழகத்தில் 50 லட்சம் பேரும், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் பயன்பெறுவர்.
கனிம வளங்கள் அள்ளும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும்: ஈரோடு மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் அனுமதி இன்றி கனிம வளங்கள் கடத்துவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது அதை தடை செய்ய வேண்டும்.அதற்கு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத் துவதை கட்டாயமாக்க வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்துள்ளதால் ஆறு பகுதிகளில் மணல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மலிவு விலையில் மணல் வாங்கும் வகையில் குவாரிகளை அதிகப்படுத்த வேண்டும் . சங்கம் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு விரைவில் ஈரோட்டில் பாராட்டு விழா நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.