Close
நவம்பர் 22, 2024 10:36 காலை

பெண்களுக்கான நகரப் பேருந்து களை அதிகரிக்க வேண்டும்: வாலிபர் சங்க இளம்பெண்கள் மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட இளம்பெண்கள் மாநாடு புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது

பள்ளி நேரங்களில் பெண்களுக்கான நகரப் பேருந்துகளை அதிகரிக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம்பெண்கள் மாநாடு வலியுறுத்தி உள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட இளம்பெண்கள் மாநாடு புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கிவைத்து மாவட்டப் பொருளாளர் சுமதி பேசினார். மாநாட்டை வாழ்த்தி மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகாதேவி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், செயலாளர் ஏ.குமாரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய உபகுழுவை அறிமுகப்படுத்தி மாநில பொருளாளர் எஸ்.பாரதி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளராக சிவஸ்ரீ, துணை அமைப்பாளராக முத்துலெட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளி நேரங்களில் பெண்களுக்கான நகரப் பேருந்துகளை அதிகரிக்க வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உள் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மகாலெட்சுமி வரவேற்றார். நிறைவிவ் சிவஸ்ரீ நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top