Close
நவம்பர் 22, 2024 12:55 மணி

மதுரை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர் பெரியசாமி ஆய்வு

மதுரை

மதுரையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி,  ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள் ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி  கூறியதாவது: மதுரை மாவட்டத்தில், இன்றைய தினம் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுப் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் , எண்ணத்திற்கேற்ப, ஊரக வளர்ச்சித்துறை யின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமப்பகுதி மக்களுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை முழுமையாக கொண்டு சேர்ப்பதற்கும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்து வதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தில், பின்தங்கிய மக்களுக்கு வீடுகட்டும் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டும் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு, உடனடியாக பணியினை முடிக்க வேண்டுமென்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையின் மூலம் நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசின் மூலம் வெளியிடப்பட்டு, இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

விற்பனையாளர்கள் பணியிடங்களை விரைவில் நிரப்பப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நியாயவிலைக் கடைகள் அனைத்தும் சொந்த கட்டிடங்களில் இயங்க வேண்டும் என்பதற்காக, புதிய நியாயவிலைக்கடைகள் கட்டுவதற்கான கட்டிடப்பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்  அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

மதுரை
மதுரையில் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பெரியசாமி

கூட்டத்திற்கு பின்னர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி , டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள் பட்ட வன்னிவேலன்பட்டி ஊராட்சி மன்றக் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள் பட்ட வன்னிவேலன்பட்டி ஊராட்சி நியாய விலைக்கடையி னையும், புல்கட்டை ஊராட்சி ஊரணியையும் ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்எஸ்.அனீஷ் சேகர், கூடுதல் ஆட்சியர் (மாவட்ட முகமை திட்ட அலுவலர்) செ.சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவைர்கள், ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top