Close
நவம்பர் 22, 2024 8:39 காலை

புதுக்கோட்டையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் பணிநியமன் ஆணை வழங்கிய சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு தலைமையில் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை  சட்டம், நீதிமன் றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  (11.03.2023) வழங்கினார்.

பின்னர்  அமைச்சர் தெரிவித்ததாவது: நம்முடைய வாழ்வா தார மேம்பாட்டிற்காக நமக்கான வேலைவாய்ப்பு களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் முந்தைய காலத்தில் வேலைவாய்ப்பிற்காக பெரிய நகரங்களுக்குச் சென்று நமக்கான வேலைவாய்ப்புகளை தேடிவந்த சூழ்நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர்ஆட்சி பொறுப்பேற்றபின் மாவட்டம் தோறும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3-ஆவது முறையாக நடைபெற்று வரும் இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தித்துறை, சேவைத்துறை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான பணியா ளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இம்முகாம் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 2500-க்கும் மேற்பட்ட வேலைநாடுனர்களுக்கு  தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்க உள்ளனர்.

எனவே இம்முகாம் மூலமாக பணி நியமன ஆணைகளை பெற்றவர்கள் தங்களது துறைகளில் பல்வேறு பதவி உயர்வு பெற்று தங்களுக்கும், தங்களது பெற்றோருக்கும் உறுதுணை யாக இருக்க வேண்டும். மேலும் உலக அளவில் பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் தமிழர்களைபோல நீங்களும் தங்களது துறையில் முன்னேற்றம் அடைய வாழ்த்துகள்  என்றார்   அமைச்சர் எஸ்.ரகுபதி.

இம்முகாமில், அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

இந்நிகழ்வில், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) இர.தேவேந்திரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன் (தொ.வ.), பெ.வேல்முருகன், கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .எஸ்.உலகநாதன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top