Close
நவம்பர் 10, 2024 8:02 காலை

பிளஸ் 1 தேர்வுகள் தொடக்கம்… தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுகை ராணியார் மகளிர் மேனிலைப்பள்ளியில் தொடங்கிய பிளஸ் 1 தேர்வை ஆய்வு செய்த ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்டம் மேல்நிலை முதலாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,  (14.03.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஆட்சியர் கூறியதாவது:தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 14)  தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்)  5 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத் தேர்விற்கு 10,555 மாணவிகள், 9,737 மாணவர்கள் என மொத்தம் 20,292 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வினை அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளி என மொத்தம் 190 பள்ளிகளைச் சேர்ந்த 10,027 மாணவிகளும், 8,813 மாணவர்களும் என மொத்தம் 18,840 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தமிழ்த்தேர்வு எழுதினார்கள்.  528 மாணவிகள், 924 மாணவர்கள்  உள்பட  1,452 பேர்  தேர்வு எழுத வரவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 97 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு பணிகளில் பறக்கும் படையினர், கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பா ளர்கள் என சுமார் 2,000 ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத கல்வித்துறை பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இத்தேர்வு மையங்களில் பலத்த காவல்துறையினர் பாதுகாப் பும் போடப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங் களில் குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது என்றார் ஆட்சியர்  கவிதாராமு.

இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட் சியர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top