Close
நவம்பர் 22, 2024 4:54 மணி

சென்னை மெரினா கடற்கரையில் தண்டி யாத்திரையின் 93 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தண்டி யாத்திரை நினைவு நாள்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திலகர் திடலில் மக்கள் நல்வாழ்வு கட்சியின் சார்பாகவும் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பாகவும் உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரையின் 93 -ஆவது நினைவு நாளை முன்னிட்டு திலகர் திடலில் மகாத்மா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மெரினா கடற்கரையிலே உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வு கட்சியின் பொதுச் செயலாளர் இ.ராமதாஸ் தலைமை வகித்தார். எஸ். உமாராணி முன்னிலை வகித்தார். எம்.டி. செல்வம் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் காந்தி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து உப்பு அள்ளும் யாத்திரையை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நல பேரவையின் நிறுவனர் முனைவர் வைர. ந தினகரன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி,  வழக்கறிஞர் சிவஞான சம்பந்தம் ,தஞ்சை இளஞ்சிங்கம் பாவலர் ராமச்சந்திரன், ஆர். செல்லபாண்டியன், பூங்கொடி, பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக திலகர் திடலில் தொடங்கி ஊர்வலமாக மெரினா கடற்கரை சென்று அங்கு உப்பு அள்ளும் நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு உப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சென்னை
காந்தி உருவப்படத்துக்கு மரியாதை செய்த காந்தி சமூக நலப்ப்பேரவை நிறுவனர் வைர.ந. தினகரன்

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.முடிவாக குமார் நன்றி உரை வழங்கினார் இந்நிகழ்ச்சியை பரமகுரு ஒருங்கிணைத்தார்.

மகாத்மா காந்தி உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள் வந்து உரையாற்றிய சென்னை மெரினா பீச்சில் உள்ள திலகர் திடலை தமிழக அரசு நினைவிடம் அமைக்கவேண்டும்.

திலகர் திடலில் பேசிய தலைவர்களுடைய நினைவை போற்றும் வகையில் இளைய சமுதாயத்திற்கு அந்த செய்தி யை கொண்டு செல்லும் வகையிலும் தியாகத்தை போற்று வோம் என்ற உணர்வை இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவதற்கு திலகத்திடலை ஒரு நினைவுச் சின்னமாக ஒரு மணிமண்டபம் அமைத்து,  தமிழக மக்கள் மட்டுமல்ல உலக மக்களும் கண்டு செல்லும் இடமாக மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக அரசிடம் வைக்கப்பட்டது.  இதை முன்னெடுத்து செல்லும் வகையில் இதற்கென்று தனியான அமைப்பு ஒன்று ஏற்படுத் தவும் திட்டமிடப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top