அதிமுக – பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்தார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வரப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் 5 -ஆவது நீரேற்று நிலையத்தில் சோதனை ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் பார்வையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிசாமியை மதுரை விமான நிலையத்தில் விமர்சித்து பேசி முகநூலில் பதிவிட்டு
சக விமான பயணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை,
அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடமை திமுக அரசிற்கு காவல்துறைக்கு உள்ளது.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் வரும் போது காவல்துறை உரிய பாதுக்காப்பு அளித்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு கொடுப்பதில் திமுக அரசு மெத்தனபோக்காக இருந்து விட்டு,
அவர் மீது வழக்கு போட்டிருப்பது கண்டனத்துக்குரிய ஒன்று.
திமுக அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்க கூடிய தாக உள்ளது.
எதிர்க்கட்சியை நசுக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு இது போன்ற பணிகளை செய்து வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை.
அந்தியூர் பொது கூட்டத்தில் பாஜ-அதிமுக கூட்டணி குறித்து பேசவில்லை. சொல்லாத ஒன்றை சொல்லியதாக கூறியிருப்பது வருத்தத்துக்குரியது என்றார் கே.ஏ. செங்கோட்டையன்.
நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் மணிகண்ட மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.