Close
நவம்பர் 22, 2024 12:24 மணி

தனித்துறை உருவாக்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர்

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் அ.பழநிசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி, விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் மற்றும் விதொச நிர்வாகிகள் எம்.சண்முகம், கே.சித்திரைவேல், எஸ்.பெருமாள், பி.ராமசாமி, ஆர்.சக்திவேல், எம்.ஜோஷி உள்ளிட்டோர் பேசினர்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை உள்ளிட்ட நெருக்கடியால் தள்ளப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர் களுக்கு கேரள அரசைப் போல, கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு விவவசாயத் தொழிலாளர் களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும்.

வீடின்றி தவிக்கும் ஏழைகளுக்கு மனைப்பட்டாவும், இலவச வீடும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டன.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் (The All India Agricultural Workers Union (AIAWU) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமை அரசியல் சார்புள்ள, விவசாயம் சார்ந்த வேலைகள் செய்யும், தொழிலாளர்களுக்கான, சட்டப்படியான வேலை நேரம், குறைந்தபட்ச கூலி சட்டம், விவசாய தொழில் முறை சார்ந்த உரிமைகள் போன்றவற்றிற்காக போராடுகிற அமைப்பு ஆகும் . இந்த அமைப்பின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை ஏறத்தாழ  55 ஆயிரம் பேர் ஆகும்.

இந்திய  அரசியலமைப்புச் சட்டப்படியான எல்லை வரைய ரைக்குள் இந்தியா முழுமைக்குமான அகில இந்திய அமைப்பாகும். இந்திய அளவில் 109 பேர் கொண்ட குழுவும், தொடர்ந்து மாநில அமைப்பும், மாவட்ட, வட்டார, பகுதிகள் அளவிலான குழுவும், இந்த அமைப்புகளுக்கு நிர்வாகிகள், களப்பணியாளர்கள் என நடைபெறும் மாநாடுகளில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படு கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top