Close
செப்டம்பர் 20, 2024 5:45 காலை

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீவானிமர விநாயகர் கோயிலில் மண்டல பூஜை

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவானிமர விநாயகர் கோவில் மண்டல பூஜைக்காக புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள்

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவானிமர விநாயகர் கோவில் மண்டல பூஜையின் இறுதி நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை தலையில் சுமந்து சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவானிமர விநாயகர்; கோயில் கும்பாபிஷேகம்  மார்ச் 3 -ஆம் தேதி நடைபெற்ற நிலையில் கடந்த 12 நாட்களாக மண்டல பூஜை நடைபெற்று வந்தது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி 12 நாட்கள் விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த நிலையில், மண்டல பூஜையின் இறுதி நாளான தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடல் மற்றும் கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு கோபி முத்துமஹால் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது.

மண்டல பூஜை இறுதி நாளான இன்று காலை முதலே விநாயகருக்கு முளைப்பாரி எடுத்து வருதல் மாவிளக்கு பூஜை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, 108 சங்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து மாலை இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் சுமந்தவாறு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து கோவிலை அடைந்தனர்.

கோவிலில் பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து 16 கணபதிகான மகா கணபதி ஹோமம், பராசக்தி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த மண்டல பூஜையின் இறுதி நாள் விழாவில் கோபி சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top