Close
நவம்பர் 22, 2024 10:13 மணி

முதிர்ந்த அகவை தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

தமிழ்வளர்ச்சித்துறை விருது அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முதிர்ந்த அகவை தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023 -ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதிகள், 01.01.2022 ஆம் தேதியன்று 58 வயது நிறை வடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச் சான்று தமிழறிஞர் கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப் பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத் தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப் படுபவருக்கு மாதம் தோறும் உதவித் தொகையாக ரூ.3500/-, மருத்துவப் படி ரூ.500/- அவரின் வாழ் நாள் முழுவதும் வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.03.2023க்குள் அளிக்கப்பட வேண்டுமெனவும் நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

தமிழறிஞர்களை கௌரவிக்கும் தமிழக அரசின் விருதுகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாகக்’ கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தியது.

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top