பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டண உயர்வைக் கண்டித்து
மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, மருதன்கோன்விடுதி அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிதாசன் பல்கலைகக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை கடுமையாக உயர்தியுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டு கின்றனர். கடந்த தேர்வில் போதே கட்டணத்தை குறைக்கும்படி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த பேச்சுவாரத்தையில் அடுத்த தேர்வின்போது குறைப்பதாக நிர்வாகம் உறுதியளித்ததாம். ஆனால், அதன்படி குறைக்காததோடு, இந்தமுறை செய்முறைத் தேர்வுக்கு மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இக்கண்டன உயர்வுகளைக் கண்டித்தும், கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் ஆர்ப்பாட்டமும், மருதன்கோன்விடுதி அரசு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாடட்த்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வசந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.சந்தோஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் தமிழ்வேல், நகரத் தலைவர் எஸ்.மகாலெட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மருதன்கோன்விடுதி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.பாலாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்தனன், துணைச் செயலாளர் எஸ்.பிரியங்கா, செயற்குழு உறுப்பினர்கள் எம்.சுருதி, அன்பரசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.