Close
செப்டம்பர் 20, 2024 8:50 காலை

பிளஸ்2 தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது அவமானம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பேட்டியளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

பிளஸ்2 தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது தமிழர் என்ற முறையில் அவமானமாகக் கருதுவதாக தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்..

புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:பால் சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஒரு அத்தியாவசிய பொருள், கொள்முதல் விலை  கட்டுபடி ஆகவில்லை என்று கூறி எல்லா இடங்களிலும் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை. மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் தட்டப்பாடு உள்ளது. இது யாருடைய தவறு. எதிர்க்கட்சி ஏன் போராட்டங்களை தூண்ட போகிறது..? ஆளுங்கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் தான் இதற்கு முழு காரணம்.

அவர்களால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால், உடனடியாக எதிர்க்கட்சி மீது பழியை போட்டு விடுவது வாடிக்கையாகிவிட்டது.  அமைச்சர் நாசர் பால் உற்பத்தியாளர்களின்  போராட்டத்தில்  உடனடியாக கவனம் செலுத்தி அந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் அதை விட்டுவிட்டு அடுத்தவர்கள் மீது குறை சொல்வது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது .

இத்தனை ஆண்டுகள் இதுபோன்ற பிரச்னை இருந்ததில்லை, ஒரு பக்கம் கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை மறுபுறம் பால் தட்டுப்பாடு உள்ளது, பால் உற்பத்தியாளர் களையும், ஆவின் நிர்வாகத்தையும் அழைத்துப் பேசி எளிய முறையில் தீர்வு காண வேண்டும்.

ஒரு கட்டிடத்திற்கு அனிதா பெயர் வைத்ததால் நீட் பிரச்சனை முடிந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு கண்துடைப்பு நாடகம்,. இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்னை வந்தால், அதனை மறைக்க கட்டிடம் கட்டுவது, எதையாவது கட்டுவதுதான் ஆட்சியாளர்கள் கையாளும் யுக்தியாக உள்ளது.

நீட் விவகாரத்தை வைத்து அரசியல் லாபம் பெற்றவர்கள். அந்த விவகாரம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

ஈரோடு  கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள்  துணிச்சலுடன்  களத்தில் நின்றுள்ளோம். அங்கு நடந்தது ஜனநாயகத்திற்கு விரோதமான தேர்தல். இது போன்ற ஒரு மோசமான தேர்தலை நாங்கள் பார்த்ததே இல்லை. ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு உடல் நிலை சரியில்லாதது உண்மையில் வருத்தம் அளிக்கிறது.  அவரை வலுக்கட்டாயமாக  போட்டியிட  வைத்துள்ளனர்.

திருச்சி சம்பவம் தான் திராவிட மாடல்.. திருச்சி சிவா வீட்டை, அவரது கட்சியினரே சேதப்படுத்திய சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி இருந்து இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து இருக்குமா.

50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுதாததை தமிழர் என்ற முறையில் அவமானமாக நான் கருகிறேன். தமிழை வைத்து அரசியல் செய்கிறவர்கள். இதைப்பற்றி யோசிக்க வேண்டும். இனிமேல் இது போன்ற ஒரு அவலம் நடக்காமல் தடுக்க வேண்டும்.

அதிமுக 4 ஆக பிரிந்து உள்ளார்கள். ஒரே கட்சியில் இத்தனை பிரிவுகள் இருக்கும் போது அவர்கள் எவ்வாறு அடுத்த கூட்டணியை பற்றி பேசமுடியும்.  முதலில் அவர்கள் கட்சிக்குள் நடக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top