புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளர் சி. தமிழ்மணி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புவனேஸ்வரன், ரவிச்சந்திரன் ஸ்ரீதர் போக்குவரத்து காவலர்கள் ராஜசேகர், உத்தமி, சற்குணன், விஜய்,சதீஷ் தேன்மொழி, கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் பிரிவில் 5 பெண் காவலர்கள் உள்பட மொத்தம் 16 பேர் பணியாற்றி வருகின்றனர்.
புதுக்கோட்டை நகரில், பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி விஇஎஸ் கார்னர், பிருந்தாவனம், பழனியப்பா கார்னர், ஆயுதப்படை மைதானம் பழைய மருத்துவமனை சந்திப்பு, புதிய பேருந்து நிலையம்(உள்), புதிய பேருந்து நிலையம்(வெளி) சந்தைப்பேட்டை சாலை, டிவிஎஸ் கார்னர்(பிள்ளைதண்ணீர்பந்தல்), தெற்கு 4- முருகன் கோயில், கீழராஜவீதி (முழுவதும்) உள்ளிட்ட இடங்கள் போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் ஒழுங்கு படுத்தும் பணிகளில் போலீஸர் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை நகரில் பெருகியுள்ள வாகனப் போக்குவரத்து மற்றும் அதனால் உருவாகக்கூடிய நெரிசல்கள், இடையூறு களை மேலும் செம்மையாக சீரமைத்து கண்காணிக்கும் வகையில் புதுக்கோட்டை நகர போக்குவரத்துப்பிரிவில் குறைந்தது 10 காவலர்களை கூடுதலாக நியமிக்க மாவட்ட காவல் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.