Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாநிலை போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை.யில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த உண்ணாநிலை போராட்டம்

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

                       20 அம்சக் கோரிக்கைகள்

நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதிய அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட வேண்டும்.

EMIS வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்படு வதை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும்.சிக்ஷா மீட்ரா, சிக்ஷா கர்மி, நியோஜிட் சிக்ஷக் ஆகிய திட்டங்களின் கீழ் அனைத்து மாநிங்களிலும் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்களை முறைப்படுத்தி நிரந்தரம் செய்திட வேண்டும்.

பள்ளி இணைப்புகள், கற்பித்தலுக்கு தன்னார்வலர்கள் நியமனம், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடி களில் பணியயர்த்துவது போன்ற கல்வி நலனுக்கு எதிரான முடிவுகளை தேசியக் கல்விக் கொன்கை 2020 -ல் இருந்து நீக்கப்பட வேண்டும்.  ஒரே நாடு ஒரே கொள்கை என்ற அடிப்படையில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நாடு முழுவறம் ஒன்ற மாதிரியாக அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பண்புரியும் ஆசிரியர்களுக்கு அவர்களது ஊதிய பிடித்தத்தின் மூலம் மேற்கொள்ளபடும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் பலனை ஆசிரியர்கள் முழுமையாக பெறும் வகையில் அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

நான்காவது ஊதியக்குழுவிற்கு பின்வரும் ஊதியக்குழு பரிந்துரைகளில் ஆசிரியர்களிடையே மூத்தோர்/ இளையோர் ஊதிய முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை சரிசெய்யும் வகையில் நான்காவது ஊதியக்குழுவால் தெரிவிக்கப் பட்டுள்ள 4(3) விதியினை பிந்தைய அனைத்து ஊதியக்குழு விலும் செயல்படுத்தி மூத்தோர் / இளையோர் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (தொடக்க கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 10. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தினை ரத்து செய்து பழையநிலையிலான பதவி உயர்வு வழி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடரச் செய்திட வேண்டும்.

ஆசிரியர்கள் அவ்வப்போது சமூக விரோதிகளாலும், ஒழுங்கீன நடத்தை உள்ளவர்களாலும் தொல்லைகளுக்கு ஆளாகி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். மருத்துவர் களுக்கு உள்ளதுபோல், ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்.

மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக உயர்கல்வி படித்துவரும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊக்க ஊதிய உயர்வு 10.3.2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ஊக்கத் தொகையாக மாற்றி தமிழக அரசு வழங்கியிருப்பதை கைவிட்டு மீண்டும் பழைய முறையில்

ஊக்க ஊதியமாகவே வழங்கிட வேண்டும். முன்னநாக 10.3.2020 -க்கு முன்னர் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பி.லிட், பி.எட் படித்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு வரும் தணிக்கைத் தடையினை நீக்கி பழைய முறையில் ஊக்க ஊதியம் தொடர செய்திட வேண்டும்.

மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கோடு உயர்கல்வி படித்து பின் அனுமதிக்காக காத்திருக்கும். 6500ஆசிரியர்களுக்கு பின்னேற்பு வழங்க வேண்டும்.

2022-2023-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக பதவி உயர்வின் மூலம் நிரப்பிட வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) ரத்து செய்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை செய்திடவேண்டும்.

15.11.2011 முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் பத்து வருட கால ஆசிரியர் பணியினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களித்து தொடர்ந்து பணியாற்ற ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்துக்கு மாவட்டத்தலைவர் ஆ.செல்லத்துறை தலைமை வகித்தார். பொதுச்செயலளர் மற்றும் இணைப் பொதுச்செயலர்(AIPTF) ந.ரெங்கராஜன் தொடக்கி வைத்தார்.

கோரிக்கைகளை விளக்கி மாநில நிர்வாகிகள் செ. முனியாண்டி, சு. வெண்ணிலா, தி. ராமு, சு. முத்துச்செல்வி, சுசிலாதேவிஉள்ளிட்டோர் பேசினர்.

மாநில துணைத்தலைவர் தஞ்சாவூர் க. கணேசன் போராட்டத்தை முடித்து வைத்தார். முன்னதாக மாவட்டத் துணைச் செயலாளர். இல.ந.சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளர் ஆ.தவமணி நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top