Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

கோபி அருகே கோயில் திருப்பணிக்காக தோண்டிய பள்ளத்தில் சிவலிங்கம் இருந்ததால் பக்தர்கள் பரவசம்

ஈரோடு

கோபி திருநகரில் கோயில் திருப்பணியின் போது கிடைத்த சிவலிங்கத்தை வழிபடும் பக்தர்கள்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் திருநகரில் மிகவும் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயில் சிதிலமடைந்து இருந்ததால் அறப்பணி அறக்கட்டளை சார்பில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது .

தற்போது கோயிலில் தளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் செட் அமைக்க ஜேசிபி இயந்திரம் மூலம் குழித்தோண்டிய போது சிவலிங்கம் தென்பட்டதாக கூறப்படுகிறது.  இத்தகவல் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் திரண்டு வந்து சுவாமியை குழியில் இருந்து எடுத்து சுத்தம் செய்தனர்.பிறகு சிவலிங்கத்துக்கு பக்தர்கள் பூஜை செய்தனர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில் இப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சிதிலமடைந்து இருந்தது. இந்த கோயில் புனரமைக்கும் பணி நடக்கிறது. இத்தகு சூழலில்,  பிரதோஷ நாளான இன்று  கோயிலுக்குள் தோண்டிய பள்ளத்தில்  சிவலிங்கம்  இருந்து பக்தர்களின் கண்களுக்கு  தென்பட்டது மிகப்பெரும் பேறு.  இந்த சிவலிங் கத்திற்கு நஞ்சுண்டேஸ்வரர் என்று நாமகரணம் சூட்டி வழிபாடு செய்ய உள்ளோம் என்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top