Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: எடப்பாடிக்காக மனு தாக்கல் செய்த பெருந்துறை நிர்வாகி…!

ஈரோடு

பொது செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு கட்டணம் 25000ரூபாயை கழக இடைக்கால பொது செயலாளர் இபிஎஸ்.க்கு ,தேர்தல் ஆணையாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் , நத்தம் விசுவநாதன் ஆகியோரிடம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ் செலுத்தினார்

அதிமுக பொது செயலாளர் தேர்தலில்  இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி போட்டியிட வேண்டி, அதற்கான  வேட்பு மனுவை அதற்கான கட்டணம் 25,000 ரூபாயை கட்சியின் தேர்தல் ஆணையாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் , நத்தம் விசுவநாதன் ஆகியோரிடம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக  செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ்  செலுத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு மார்ச் 26 -ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, போட்டியிட தகுதி நபர்களிடமிருந்து நேற்றும் இன்றும் கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு பெறப்படுவது முடிவடைந்துள்ளது.

பொதுச் செயலாளர் பதவிக்காக மொத்தம் 222 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு மனு எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தது. மற்ற 221 மனுக்களும் எடப்பாடி பழனிச்சாமி பெயரில்  கட்சி பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் தாக்கல் செய்துள்ளனர்.

பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் பொதுச் செயலாளராக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.

இந்நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற் றக் கழகத்தின்,  பொது செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு கட்டணம் 25,000 ரூபாயை, கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்காக,  பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி கே. செல்வராஜ், தேர்தல் ஆணையாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன் ஆகியோரிடம் செலுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top