Close
செப்டம்பர் 20, 2024 6:53 காலை

உலக சிட்டுக் குருவிகள் தினம்…

அயலகத்தமிழர்கள்

உலக சிட்டுக்குருவிகள் தினம்

பறவைகளில் சுறுசுறுப்புக்கு சிட்டுக்குருவியை உதாரணமாக
கூறலாம். நாம் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது, நம் பள்ளிகளில், நம் வீட்டில் இந்த சிட்டுக் குருவி கூடு கட்டி வாழ்ந்து கொண்டு இருப்பதை பார்த்திருக்கிறோம்.

எந்நேரமும் கீச்… கீச்.. என்று நம்முடன் பேசி கொண்டே இருக்கும். நாம் தனியாக இருந்தாலும் கூட நமது சொந்தங்களுடன் இருப்பது போல தோன்றும். சில நேரங்களில் இறக்கை முளைக்காத சிட்டு குருவி கீழே விழுந்து விடுவதை பார்த்திருக்கிறோம்.

அம்மா குருவி தவித்து போவதை பார்த்து, அதை மெதுவாக எடுத்து கூட்டில் விட்டு சந்தோஷப்பட்டிருக்கிறோம்.
அந்த சந்தோஷம் இப்போது உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக கிடைத்திருக்காது. இப்போது பறக்கும் குருவிகளையும், கிளிகளையும் கூண்டில் அடைத்து வளர்கிறார்கள்.

தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் குறைந்து, அழிவை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் பறவையினங் கள் அழிவதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. வயலில் உபயோகிக்கிற பூச்சுக்கொல்லிகள் மற்றும் கால் நடைகளுக்கு கொடுக்கப்படுகிற எதிர் உயிர்க் கொல்லி கள் என இன்னும் பல காரணிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சமீபமாக அலைபேசி கோபுரங்களால், சிட்டுக்குருவிகளுக்கு அழிவு ஏற்படுகின்றன என்கிற தகவலுக்கான ஆதாரப்பூர்வமான தரவுகள் நம்மிடையே இல்லை. கதிரியக்கத்தால் எல்லா ஜீவராசிகளுக்கும் தீங்கு என்பதை நாமறிவோம், மற்ற பறவையினங்களை தவிர்த்து சிட்டுக்குருவிகளுக்கு மட்டும் என்பதாக முன்னிறுத்தப்படுகிற செய்தியில் உண்மையில்லை.

சிட்டுக்குருவிகள் வயல்களில் விளைச்சலைப் பாதிக்கும் புழு, பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சி இனங்களையும் சாப்பிடும். அதனால் சிட்டு குருவியை விவசாயிகளின் நண்பன் என்பர்.
ஆனால், தற்போது வயல்வெளிகளில் பூச்சி மருந்து தெளிப்ப தால், சிட்டுக் குருவிகளுக்கு சிறு பூச்சிகளும் கிடைப்பதில் லை. கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறு தானியங் களை அதிகம் உண்ணும். தற்போது இதுபோன்ற உணவு வகைகள் எளிதாக கிடைப்பதில்லை.

உண்மையில் சிட்டு குருவிகள், வீடுகளும், மனித நடமாட் டமும் நிறைந்த பகுதிகளுக்கு காட்டில் இருந்து வந்த பறவை களே. முன்பு இருந்தது போல இப்போது நம் குடியிருப்பு கட்டட வடிவமைப்புகள் அவை கூடு கட்டுவதற்கு உகந்ததாக இல்லையென்பதும் அதற்கான தானிய வகைகள் எளிதாய் வாசலிலும், மொட்டை மாடியிலும் கிடைக்கிற சூழல் இல்லாத இன்றைய நாட்களில் அவை காட்டுக்கே சென்றிருக்க வேண்டும்.

நாம் வாழ்ந்து கொண்டிருந்த அந்த சூழல், சிட்டுகுருவிகளை சுண்டி இழுத்ததால், காட்டில் இருந்தவை மனித குலம் வசித்து வந்த இடங்களை நோக்கி வந்தன. அதற்கான உணவும், உறைவிடமும் சரிவராத சூழலில் மறுபடியும் காட்டிற்குள் சென்றிருக்க வேண்டும்.

சிட்டுக்குருவிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை விட, மனிதர்களை விட்டு அகன்றுவிட்டது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.விரதமிருந்து படையல் சோற்றை பறவைகளுக்கு வைக்கிற போது, அப்போதெல்லாம் ஒன்றிரண்டு அழைப்புக்குள், வந்து கத்துகிற காகங்கள், இப்போது எத்தனை முறை அழைத்தாலும் நம் வீட்டு கூரையிலும், மதில் சுவரிலும் வந்து உட்காருவதில்லை.

காகங்கள், குருவிகள் காணாமல் போனதற்கும் நகரமயமாக்கலில் தொலைந்து போன சூழலியல் மாற்றம் தான் காரணமாகஇருக்க முடியும்..நம் வீடு தேடி வரும் சிட்டு குருவிகளுக்கு தண்ணீர், தானியங்கள் வைப்பதை வழக்கமாக்கி கொள்வோம்; வெளியேறிய விருந்தாளிகள் விருப்பத்துடன் அடிக்கடி வந்து போவார்கள்.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top