கோபி நகராட்சியில் உலக வன நாள் தண்ணீர் நாள் கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தெப்பக்குளம் அருகில் நடைபெற்ற உலக வன நாள் மற்றும் உலக தண்ணீர் தின நிகழ்வுக்கு, நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் தலைமை வகித்தார். ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வையொட்டி மாணவ மாணவியருக்கு நீர் நிலைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பைகளை தரம் பிடித்து கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் விழிப்புணர்வு உரையாற்றினார்.
தெப்பக்குளம் பகுதியிலும் நீரோடைகள் அருகிலும் குப்பைகளை கொட்டக் கூடாது என்ற அறிவிப்புகள் 12 இடங்களில் வைக்கப்பட்டது. குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதற்கான மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனி தொட்டிகள்ள் நகரின் முக்கிய வணிக பகுதிகளில் 35 இடங்களில் வைக்கப்பட்டுள்ளதை நகர் மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் பார்வையிட்டனர். தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில், துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் தூய்மை பாரத திட்ட பரப்பரையாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், நகரவை நடுநிலைப்பள்ளி (டவுன்) மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பல்வேறு பொது நல சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.