புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியும் இணைந்து கல்லூரி வளாகத்தில் 21.03.2023 நடத்திய இரத்ததான முகாமை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் செயலாளர் எம். ராஜாராம், மற்றும் நிர்வாக மேலாளர் ஆர். நெப்போலியன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜேஷ் பேசுகையில், மாநிலத்தில் அதிகரித்து வரும் இரத்தத்தின் தேவை குறித்தும், ரத்ததானம் மூலம் அதற்கு உதவுவதன் அவசியம் குறித்தும் விளக்கினார். அத்துடன் ரத்தம் தானம் வழங்க முன் வந்த இளம் தன்னார்வலர்களின் செயல் உன்னதமானது, பாராட்டுக்கும் போற்றுதலுக்குரியது எனவும் குறிப்பிட்டார்.
இம்முகாமில் 50 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இரத்ததானம் செய்தனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முகாமில் 40 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது.