Close
நவம்பர் 25, 2024 2:37 காலை

ஓய்வூதிய உதவிதொகை பெறுவதற்கு நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

2023-2024 -ம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள முன்னாள் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவிதொகை பெறுவதற்கான விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணைய முகவரி (www.sdat.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்க குறைந்த பட்ச தகுதி களான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்;டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம்,  இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும்.

தகுதியான விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அகில இந்திய பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டிகள் இந்திய போட்டிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வ தேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு 2023 -ஆம் வருடம் ஜனவரி மாதம் (31.01.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்ப தாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ 6000 – ல் இருந்து ரூ15000 – க்குள் இருத்தல் வேண்டும். ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்,  மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.எனவே  மேற்காணும் தகுதியுடைய புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வீரர்கள்  விண்ணப்பங்களை (www.sdat.tn.gov.in) இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.

விண்ணப்பங்களை 20.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 19.04.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்குபின் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இணையதளம் மூலம் விண்ணப்பித்த பிறகு ஏழு வேலை நாட்களுக்குள் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களு டைய சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரிடம் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக ஒப்படைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களின் தொலைபேசி எண் 7401703498 தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top