Close
நவம்பர் 22, 2024 5:28 மணி

அன்புஜோதி காப்பக விவகாரம்.. சிபிசிஐடி விசாரணைக்கு பிறகே தேசிய குழந்தைகள் ஆணையம் தலையிடும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் போட்டியளித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி காப்பக முறைகேடு விவகாரத்தில்  சிபிசிஐடி விசாரணை அறிக்கை வந்த பிறகே தேசிய குழந்தைகள் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை  எடுக்கும் என்றார் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் .

தேசிய ஆணையம் விழுப்புரம் மாவட்டம் அன்புஜோதி மையத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை களை எடுத்துள்ளது, இரண்டு அறைகள் சீல் வைக்ககப்பட் டுள்ளது, இதில் குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது,.

அதில் இனி கிடைக்க வேண்டியது நியாயம் மட்டுமே. அது சிபிசிஐடி விசாரணைக்கு பின்னரே தெரியவரும், சிபிசிஐடி அறிக்கை வந்த பின்பு தான் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ஏதும் கருத்துகளை சொல்ல முடியும். அன்பு ஜோதி  காப்பக வழக்கை பொருத்தவரையில், தமிழக அரசு தேசிய குழந்தைகள் ஆணைத்துக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தது. தமிழக அரசின் ஒத்துழைப்பு இருந்தால் குழந்தைகள் நட்பு மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும்.

மார்ச் 26 ஏப்ரல்  12 -க்குள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 21 இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்,

சிவகங்கை, இராமநாரபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது, குழந்தைகள் நேரடி குறைதீர் முகாம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்றார் ஆர்.ஜி. ஆனந்த். பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top