புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார சுகாதார நிலையத்தில் உலக காசநோய் நாள் (24-03-23) நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறையின். மருத்துவர் கே. சரவணன் பங்கேற்று, பொது மக்களுக்கு காசநோய் எப்படி ஏற்படுகிறது எப்படி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. அதற்கான பரிசோதனை முறைகள், காசநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
மேலும் காசநோய் வராமல் தடுக்க முகக்கவசம் அணிவது; பொது இடைவெளி கடைபிடிப்பது; கைகளை சோப்பு போட்டு கழுவுதல், உடற்பயிற்சி, நுரையீரல் வலிமை பெற மூச்சு பயிற்சி குறித்தும்; எப்படி மூச்சு பயிற்சி செய்வது என்பதையும் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியை மருத்துவர் கௌரி சங்கர் ஒருங்கிணைத் தார். பயிற்சி மருத்துவர்கள் பொது மக்களுக்கு காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில் பொது மக்களின் காசநோய் பற்றிய சந்தேகங்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. திருவரங்குளம் மருத்துவ அலுவலர் தம்பித்துரை நன்றி கூறினார்.