Close
செப்டம்பர் 20, 2024 7:33 காலை

திருமண நாளை இடுகாட்டில் கொண்டாடிய தம்பதி.!

புதுக்கோட்டை

முன்னோர்களை அடக்கம் செய்த இடுகாட்டில் தனது திருமணநாளை கொண்டாடிய சமூக ஆர்வலர் இளவரசன்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே டி.களபம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளவரசன் தம்பதி தங்களது திருமணநாளை இடுகாட்டில் உள்ள மறைந்த முன்னோர்களின் சமாதியில் வழிபாடு நடத்தி கொண்டாடி வியப்பில் ஆழ்த்தினர்.

இது குறித்து சமுக ஆர்வலர் இளவரசன் கூறியதாவது: கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது திருமணத்தின் போது மாங்கல்யம் எடுத்துக் கொடுத்த பெரியப்பா, பெரியம்மா, மாமா, சித்தி, சித்தப்பா மற்றும் அப்பொழுது எங்களை வாழ்த்திய பலரும் தற்போது உயிருடன் இல்லை.

இந்நிலையில், எங்களது 11 -ஆவது ஆண்டு திருமண நாளில் முன்னோர்களிடம் ஆசி பெறுவதற்காக அவர்களை அடக்கம் செய்த இடுகாட்டுக்கு வந்தோம். இங்கு அமைக்கப்பட்டுள்ள சமாதிகளில் மலர் வைத்து வணங்கி ஆசிபெற்றோம்.

மேலும், தற்போது கோடை காலம் என்பதால் காகம், குருவிகள், வெவ்வால் பறவையினங்களின் தாகம், பசியைப் போக்குவதற்காக தானியங்களும் பழவகைகளும், குடி நீர் ஊற்றி வைக்க மண்பாண்டங்களும் கொண்டு வந்துள்ளோம்.

இதை உண்ணும் முன்னோர்களாகப் பார்க்கக்கூடிய காகம், குருவிகள், வெவ்வால்கள் எங்களை வாழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்தார் சமூக ஆர்வலர் இளவரசன். திருமண நாளில் கோயிலுக்கு போய் வழிபடுவதும், தாய், தந்தை, மாமனார் மாமியார் உள்ளிட்டோரிடம் ஆசிபெறுவதும், வசதியானவர்கள் பல்வேறு முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நேரில் சென்று உணவு அளிப்பதும் வழக்கமாக நாம் பார்த்து வரக்கூடிய நிகழ்வு.

ஆனால், இந்த தம்பதி தங்களது திருமண நாளன்று  இடுகாட்டுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள உறவினர்களின்  சமாதியை வணங்கியதும், பறவைகளுக்கு உணவும் தண்ணீரும் அளித்தது வித்யாசமான சிந்தனையா கவும் வேறுபடுத்திக்காட்டும் நிகழ்வாகவே பார்க்க முடிடுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top