Close
நவம்பர் 22, 2024 3:04 மணி

இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக நாடக தினம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டது

கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா உலக நாடக தினம் குறித்து பேசியதாவது:  உலக நாடக அரங்க நாள் ஆண்டுதோறும் மார்ச் 27 -ஆம் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தி னால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது.

தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என மூன்று பெரும் பகுதிகளை உடையது. இது உலகின் வேறு எந்த ஒரு மொழிக்கும் இல்லாத தனிச் சிறப்பாகும். எனவே தமிழை முத்தமிழ் என்றும் அழைக்கலாம்.

இதில் நாடகத் தமிழ் பழங்காலம் முதலே படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. நாடகக் கலை என்பது உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடியாகும்.இதில் நாடகத் தமிழ் பழங்காலம் முதலே படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.

நாடகக் கலை என்பது உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடியாகும்.இதில் நாடகத் தமிழ் பழங்காலம் முதலே படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. நாடகக் கலை என்பது உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடியாகும். தன்னார்வலர்கள் மாணவர்கள் வருகை பதிவை இல்லம் தேடிக் கல்வி செயலில் பதிவேற்ற வேண்டும் என்றார் அவர்.

இதையொட்டி, மாணவர்கள் எனது ஊர் என்ற தலைப்பிலும், எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் நாடகங்கள் நடித்து காட்டினார். முன்னதாக தன்னார்வலர் சத்யா வரவேற்றார். நிறைவாக தன்னார்வலர் சுகன்யா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top