Close
நவம்பர் 22, 2024 5:35 மணி

கோபி அருணை ரமணா கல்வி அறக்கட்டளை பயிற்சிப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி

ஈரோடு

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி

ஏப்.4  -ல் அருணை ரமணா கல்வி அறக்கட்டளை பயிற்சிப் பள்ளியில், TNPSC தேர்வுக்கான மாதிரி மற்றும் அலகுத் தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக, ஈரோடு மாவட்டம்,  கோபிச்செட்டிபாளையம் அருணை ரமணா அறக்கட்டளை தெரிவித்த தகவல்: இத்தேர்வுகள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும், 12 மாதங்கள் நடைபெறும்.
Unit tests – 28 (7months) Combined unit test – 8 (2 months) Full Portion tests – 24 (3 months) மொத்த பாடத் திட்டத்தையும் 28 Unit களாகப் பிரித்து 28 தேர்வுகள் (ஒவ்வொரு வாரமும் ஒரு தேர்வு)பின்னர் 3 அல்லது 4 unit களை ஒன்று சேர்த்து 8 தேர்வுகள் (ஒவ்வொரு வாரமும் ஒரு தேர்வு).

அதன் பின்னர் மொத்தப் பாடத்திட்டத்தில் இருந்தும் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு 24 தேர்வுகள் (ஒவ்வொரு வாரமும் இரண்டு தேர்வுகள்) ஒவ்வொரு சனிக்கிழமையும் வழக்கம் போலவே வகுப்புகள் நடைபெறும்.ஒவ்வொரு ஞாயிறு அன்றும் காலை 9.30 மணிக்கு தேர்வு நடைபெறும். தேர்வுக்கு பின்னர் மாலை 5.00 மணி வரை அடுத்த வார தேர்வுக்கான Revisions நடைபெறும்.

பயிற்சிப் பள்ளியில் படிப்போர் மட்டுமல்ல. மற்ற பயிற்சி மையங்களிலோ, வீட்டிலோ படிப்போரும் இத்தேர்வுகளில் பங்கு பெறலாம்.இத் தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிக்க ஆகும் செலவு மட்டும் செலுத்தினால் போதுமானது. பயிற்சிக் கட்டணம் என எதுவும் இல்லை. ஏற்கெனவே இத்தேர்வுகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த Batch வரும் 02.04.2023 அன்று முதல் தொடங்கும்.

இதுவரை போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆகிக் கொண்டிருப் பவராக இருந்தாலும் சரி, இனிமேல் தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்போராக இருந்தாலும் சரி. நீங்கள் அனைவ ருமே இத்தேர்வுகளை எழுதலாம்.

ஓராண்டு முடிவில் இத் தேர்வுகள் நிறைவடையும் போது நீங்கள் போட்டித் தேர்வுகளுக்கு முழுமையாக, நிறைவாக தயாராகி இருப்பீர்கள். இத்தேர்வுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோர் அடுத்த ஆண்டில் உறுதியாக அரசு அலுவலராக பணியேற்பது  உறுதி.

தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 99420 51155 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்தோ, வாட்ஸ் ஆப் செய்தோ, குறுஞ்செய்தி அனுப்பியோ பதிவு செய்து கொள்ளுங்கள்.பதிவு செய்துள்ளோருக்கு மட்டுமே வினாத்தாள் தயார் செய்ய முடியும்.
அருணை ரமணா பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற நீங்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. வினாத்தாள் நகல் எடுக்க ஆகும் செலவை மட்டும் செலுத்தினால் போதும்
என அருணை ரமணா கல்வி அறக்கட்டளை  நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top