Close
செப்டம்பர் 20, 2024 5:39 காலை

அமெரிக்க கடற்படை கப்பல் மேத்யூ பெர்ரி பராமரிப்பு பணி நிறைவு

சென்னை

அமெரிக்க கடற்படை கப்பல் மேத்யூ பெர்ரி பராமரிப்பு பணி நிறைவடைந்து ரோந்துப் பணிக்கு திரும்பியது

அமெரிக்க கடற்படை கப்பல் மேத்யூ பெர்ரி பராமரிப்பு பணி நிறைவடைந்து ரோந்துப் பணிக்கு திரும்பியது.

சென்னை அருகே காட்டுப்பள்ளி எல் அன் டி கப்பல் கட்டும் தளத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை கப்பல் மேத்யு பெர்ரி பணிகள் நிறைவடைந்த நிலையில் செவ்வாய்க் கிழமை தாய்நாடு புறப்பட்டுச் சென்றது.

அமெரிக்க கடற்படையின் கடற்படை கப்பலான மாத்யூ பெர்ரி சென்னை அருகே உல்ள காட்டுப்பள்ளி எல் அன் டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மார்ச் 11-ஆம் தேதி அனுமதிக்கப் பட்டது.

இதனையடுத்து விரைவாக பணிகள் நடைபெற்ற நிலையில் பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவுற்றதையடுத்து செவ்வாய்க்கிழமை அமெரிக்க கடற்படை அதிகாரிகளிடம் இக்கப்பல் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இக்கப்பல் கட்டும் தளத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட அமெரிக்காவின் இரண்டாவது கடற்படை கப்பலாகும். இதற்கு முன்பு சார்லஸ் ட்ரூ என்ற அமெரிக்கக் கப்பற்படை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனுமதிக்கப்பட்டு பழுது பார்க்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்கக் கப்பற் படையின் கப்பல்களை தொடர்ந்து பழுது பார்க்கவேண்டும் என்ற திட்டம் இதன் மூலம் நிறைவேறி வருகிறது.
அமெரிக்க துணைத் தூதர் கருத்து:

இந்தியா
காட்டுப்பள்ளி எல் அன் டி கப்பல் கட்டும் தளத்தில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் முடிந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் மேத்யூ -வை அமெரிக்க கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைந்த எல் அன் டி நிறுவன அதிகாரிகள்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் வெளியிட்ட அறிக்கை:  அந்தோ-பசிபிக் பெருங்கடல்  சார்ந்த அமெரிக்கா பெருமை கொள்கிறது.  நாட்டின் முக்கிய நலன்கள் இப்பிராந்தியத்துடன் ஆழமாக இணைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்குதா ரராக‌ இந்தியா திகழ்கிறது.

அமெரிக்கக் கப்பற்படையின் மேத்யூ பெர்ரி கப்பலின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் இந்தியாவில் நடைபெற்றதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுப்படும்.

பாதுகாப்பு படை கப்பல்களை பயனுள்ள வகையிலும், திறமையாகவும் மற்றும் குறைந்த செலவில் பழுதுபார்ப்பதில் இந்திய கபபல் கட்டும் தளம் சிறப்பாகச் செயப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் ‌இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை மிக்க‌ பகுதியாக விளங்கச் செய்ய முடியும் என தெரிவித்துள் ளார் ஜூனித் ரேவ்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top