Close
செப்டம்பர் 20, 2024 9:31 காலை

ரஷியா இலக்கிய – நாடக உலகின் ஜாம்பவான் மார்க்சீம் கார்க்கி……

இங்கிலாந்திலிருமந்து சங்கர்

மார்க்சீம் கார்க்கி

மார்க்சீம் கார்க்கி 20 ஆம் நூற்றாண்டின் ரஷியா இலக்கியம் மற்றும் நாடகத்தின் மாபெரும் ஜாம்பவான். மக்களில் சிலர் ஏழைகளாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை யதார்த்தமாக சித்தரித்ததால், இலக்கிய உலகில் வெகு சீக்கிரமாக நன்கு அறியப்பட்டவர்.

கார்க்கி கடினமான காலங்களில் வளர்ந்தார், கீழ்த்தட்டு மக்களின் குரலாக வாழ்நாள் முழுவதும் ஒலித்துக் கொண்டி ருந்தார். அவர் சக ரஷியா எழுத்தாளர்களான லியோ டால்ஸ் டாய் மற்றும் அன்டன் செக்கோவ் ஆகிய இருவருடனும் தொடர்பு கொண்டிருந்தார்.

ஜார் ஆட்சியின் தீவிர எதிர்ப்பாளராகவும் போல்ஷிவிக் இயக்கத்தின் ஆதரவாளராகவும் இருந்தார். ஒரு காலகட்டம் வரை லெனினுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

1902 ஆம் ஆண்டில், தி லோயர் டெப்த்ஸ் என்ற நாடகத்தை கார்க்கி வெளியிட்டார், இது மிகவும் பிரபலமானது. மாஸ்கோ கலை அரங்கத்தில், ஐரோப்பிய அரங்கங்களில் மேடை யேறியது. அந்த படைப்பு ஜெர்மன் பதிப்பில், பெர்லினில் தொடர்ச்சியாக 300 முறை அச்சிடப்பட்டது.

கார்க்கியின் இந்த வெற்றியை கண்டு டால்ஸ்டாய் அதிர்ச்சிய டைந்தார். அவர் முதலில் நாடகத்தைப் பார்த்த போது, “நீங்கள் ஏன் இதை எழுதுகிறீர்கள்” என்று கார்க்கியிடம் கேட்டார். விபச்சாரிகள் மற்றும் குடிகாரர்களை சித்தரிக்கும், வீடற்ற மக்களுக்கான இரவு தங்குமிடம் பற்றிய நாடகம் பொதுமக்க ளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று அவரால் கற்பனை செய்ய முடியவில்லை.

கார்க்கி பற்றிய வெறுப்புணர்வு கொண்ட கருத்து டால்ஸ்டா யிடம் நிலவினாலும், கார்க்கி டால்ஸ்டாயை கிட்டத்தட்ட ஒரு கடவுளாகக் கருதினார். மெல்ல மெல்ல வெள்ளை தாடி இலக்கிய மேதை, கார்க்கியின் புதிய உரைநடையின் முக்கியத்துவத்தை உணர்ந்தார், ஆனால் கார்க்கியின் எதிர்பாராத வெற்றியைப் பற்றி படிக்கும் போது உள்ளூர எரிச்சலடைந்தார். பெரும் இலக்கிய மேதைகளுக்குள்ளும் சிறுபிள்ளைதனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

கார்க்கியின் அரசியல் செயல்பாடுகள், ரஷியா வாசகர்களி டையே பிரபலமாக்கியது. இருந்த போதிலும் அவரது இலக்கிய அரசியல் கருத்துகள் தான் அவரை பல ஆண்டுகள் நாடு கடத்தப்படுவதற்கு வழிவகுத்தது.

1900 வாக்கில், கார்க்கி புகழ்பெற்ற இலக்கிய வாதியாக இருந்தார், அன்டன் செக்கோவின் உதவிக்கு அவருக்கு எப்போதும் கிடைத்து வந்தது. அவரது சிறுகதைகள் மற்றும் அவரது முதல் நாவலான ஃபோமா கோர்டேவ் (1902) அவருக்கு புகழ் மற்றும் விமர்சனம் நிறைந்த வெற்றியை தேடி தந்தது , ஆனால் நிக்கோலஸ் II இன் ஆட்சிக்கு எதிரான அவரது வெளிப்படையான எதிர்ப்பு, அவரை காப்ரி தீவுக்கு நாடு கடத்த வழிவகுத்தது (1907-13).

1917 புரட்சிக்குப் பிறகு, அவரது நண்பர் லெனின் மற்றும் போல்ஷிவிக்குகள் மீதான கார்க்கியின் விமர்சனம், இத்தாலிக்கு (1921-1931) மீண்டும் நாடு கடத்தப்பட வழிவகுத் தது.  இந்த காலகட்டங்களில்,தி அர்டமோவ் பிசினஸ் (1925), கள்ள நாணயம் (1926) மற்றும் யெகோர் புலிச்சோவ் (1931) போன்ற நாடகங்களை அவர் தொடர்ந்து எழுதினார்.

லெனினின் மரணத்திற்குப் பிறகு சோவியத் யூனியனைக் கைப்பற்றிய ஜோசப் ஸ்டாலின், கார்க்கியின் செயல்பாடு களை கண்காணிக்க அவர் நிரந்தரமாக நாடு திரும்புவது நல்லது என்று முடிவு செய்தார்.

1932 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்டாலினின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் சோவியத் ஒன்றியத்திற்குத் திரும்பினார். கார்க்கி ரஷியாவுக்குத் திரும்பிய போது, அவர் ஒரு சிறந்த சோவியத் வீரனாக பாராட்டப்பட்டார். அங்கு அனைத்து வகையான தேசிய மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஜோசப் ஸ்டாலினின் மிருகத்தனமான ஆட்சிக்கு “தன்னை விற்று விட்டார்” என்ற அவப்பெயரை கார்க்கி சிறிது காலத்திற்கு தாங்கி சென்றார். ஆனால் அவர் ரஷியாவிற்கு திரும்புவதற்கான காரணங்கள் தெளிவாக மக்களால் புரிந்து கொள்ளப்படவில்லை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கான அவரது நேர்மையான அனுதாபத் தை யாரும் பொருட்படுத்தவில்லை. ஜூன் 1936 ஆண்டு வரை (அவர் இறக்கும் வரை) அங்கேயே வாழ்ந்தார். கார்க்கியின் மரணம் நீண்ட காலமாக, ஊகங்களுக்கு உட்பட்டது.ஒன்று அவர் இயற்கை மரணம் எய்தினார் என்றும் ஸ்டாலின் அவரைக் கொலை செய்ய உத்தரவிட்டார் என்பதாகவும் கருத்து நிலவியது.

–இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top