Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

கோபி நகராட்சியில் இரவு நேர குப்பை சேகரிக்கும் பணி தொடக்கம்

ஈரோடு

கோபி நகராட்சியில் இரவு நேர துப்புரவு பணியை தொடக்கி வைத்த நகர்மன்றத் தலைவர் என் ஆர் நாகராஜ்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இரவு நேர குப்பை சேகரிக்கும் பணியை  நகர மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ்  தொடங்கி வைத்தார்.

நகராட்சிகளின் திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குனர் இளங்கோவன் 28.03 2023 அன்று நகரில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட்டு கூறிய அறிவுரை களின் படி,  இன்று முதல் தினசரி இரவு நேர வணிக நிறுவனங்களில் குப்பை சேகரிக்க பணி தொடங்கப்பட்டது.

நகரமன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் பணிகளை தொடங்கி வைத்தார். நகர் மன்ற உறுப்பினர்கள் ஹக்கீம், மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

துப்புரவு அலுவலர் சோழராஜ் தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சௌந்தரராஜன் ஆகியோர் தங்கள் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்க ளான ஹோட்டல்கள் பேக்கரிகள் கோழிக்கடைகள் மற்றும் இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் குப்பைகளை சேகரிக்கப்பட்டது.

துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஸ்வநாதன் விஜயன் பூங்கொடி சக்திவேலு செல்வகுமார் மற்றும் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் இப்ப பணிகளை உடனிருந்து கவனித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top