Close
நவம்பர் 25, 2024 6:14 மணி

மானியக்கோரிக்கையில் ஏமாற்றம்… கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழில் சங்கத்தினர்

புதுக்கோட்டை

தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிலாளர்கள்

சட்டப்பேரவையில் நடைபெற்ற போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில் போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற மானியக் கோரிக்கையில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை அனைத்து போக்குவரத்துப் பணிமனைகளின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 87 ஆயிரம் போக்குவரத் துத் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு மற்றும் காலிப்பணியிடங் களை நிரப்புவது குறித்து எதுவும் குறிப்பிடாததைக் கண்டித்தும்,

பேருந்துகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப் பட்ட கோரிக்கைளை அமல்படுத்தாததைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் போக்குவரத்துப் பணிமனைகள் முன்பாகவும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள அனைத்துக் கிளைக ளிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) புதுக்கோட்டை மண்டல பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார்.

புதுக்கோட்டை
கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கந்தர்வகோட்டையில் கே.சபாபதி தலைமையில் மத்திய சங்கத் தலைவர் கே.கார்த்திக்கேயன், அறந்தாங்கியில் பி.லோகநாதன் தலைமையில் மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் செந்தில்நாதன், ஆலங்குடியில் ஆர்.சுந்தர் தலைமையில் மத்திய சங்க துணைச் செயலாளர் என்.மெய்யராம்,

பொன்னமராவதியில் கண்ணன் தலைமையில் மத்திய சங்க துணைச் செயலாளர் பாலகுமார், திருச்சியில் கே.முருகன் தலைமையில் மத்திய சங்க துணைச் செயலாளர் எஸ்.செந்தில்குமார், பட்டுக்கோட்டையில் ராஜசேகரன் தலைமையில் மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சாமியய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top