Close
செப்டம்பர் 20, 2024 8:29 காலை

மாட்டுக்கறி வழக்கில் 4 பேர் விடுதலை: தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சாவூர்

மாட்டுக்கறி வழக்கில் தஞ்சை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகள்

மாட்டுக்கறி வழக்கில் நான்கு பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2019 -ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாஜக அரசால் முன்னெடுக்கப்பட்ட மாட்டுக்கறிக்கு எதிரான அரசியலை கண்டித்தும், திருவாரூர் மாவட்டத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் , தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்பாகவே தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, மாநகர செயலாளர் ஆலம்கான், நிர்வாகிகள் ரைகன், முபின், அனஸ், ரசூல், மைதீன் ஆகிய ஏழு பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் மேற்கு காவல் துறையால் வழக்கு பதியப்பட்டு,கைது செய்து ஒரு வாரம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் பிணையில் வெளியே வந்து, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் இன்று தஞ்சை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்- 1 -இல், குற்றம்சாட்டப்பட்ட அருண் சோரி, ஆலம் கான், முபின், ரைகன் ஆகிய நால்வரையும் நீதிபதி,   குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்தார்.

தஞ்சையின் மூத்த வழக்கறிஞர், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சி.அமர்சிங் முன்னிலையில் இடதுசாரிகள் போதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், முனைவர் ஜான், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் ஆகியோர் வழக்கை முன்முயற்சியுடன் எடுத்தனர்.

இந்த வழக்கை நடத்தி விடுதலை பெற்று தந்த வழக்கறிஞர் இ. சதீஷ்குமாருக்கு   பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர் . வழக்கில் விடுதலை பெற்ற தமிழ்த் தேச மக்கள் முன்னணி நிர்வாகிகள் நான்கு பேருக்கும் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top