Close
நவம்பர் 22, 2024 7:24 காலை

தஞ்சை மாநகரில் தெருநாய்கள் தொல்லை: கட்டுப்படுத்த ஏஐடியுசி கோரிக்கை

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சுற்றி தெரியும் நாய்

தஞ்சை மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த   மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சை மாநகராட்சியின் 51 வார்டுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட நீலகிரி, நாஞ்சிக்கோட்டை, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தாராளமாக சுற்றித் திரிகிறது. தெருவிற்கு குறைந்தது 15 முரட்டு நாய்கள் வீதியில் சுற்றுகிறது.

தஞ்சாவூரில் மட்டும் குறைந்தபட்சம் 1000 -க்கும்  மேல்பட்ட நாய்களுக்கு மேல் இருக்கும். இந்த நாய்களால் தெருக்களில் மக்கள்  அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது. சிறுவர்கள் , குழந்தைகள்,. பெண்கள், வயதானவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களுமே தெருக்களில் நடந்து செல்ல பயப்படும் சூழ்நிலை உள்ளது .

தற்போது கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால்  தெரு நாய்களுக்கு வெறிநோய் பிடிக்கும் அபாயமும் உள்ளது. பிராணிகளுக்கு என்று ப்ளூ கிராஸ் உள்ளிட்ட பல்வேறு நல அமைப்புகள் தெருநாய்களை தொந்தரவு செய்தால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள வருபவர்கள், தெருநாய்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அனைத்து தெருநாய்களையும் பிடித்து தடுப்பூசி போடப்பட வேண்டும், பராமரிக்க வேண்டும். சமீபத்தில் நீதிமன்றம் தெருநாய்களை சோறு போட்டு வளர்க்கின்ற வீடுகளின் உரிமையாளர்களே விபரீதம் ஏற்பட்டால் பொறுப்பாவார்கள் என்று அறிவித்துள்ளது.

ஆனாலும் தெருநாய்கள் கட்டுப்படுத்தப் படவில்லை . மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , நீதிமன்றம், போக்குவரத்து பணிமனைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக வளாகங்களிலும் தெருநாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.

பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலகங்கள் செல்லும் பொது மக்களும் நாய்களை கண்டு பயப்படும் நிலை உள்ளது .எனவே நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஏஐடியுசி வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top