Close
செப்டம்பர் 20, 2024 5:28 காலை

எங்கே எனது வேலை.. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பரப்புரை பயணம்

தஞ்சாவூர்

தஞ்சைக்கு வந்த இளைஞர் பெருமன்றத்தினரின் பரப்புரை பயணம்

தஞ்சாவூர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி எங்கே எனது வேலை? என்று கேட்டு வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்ட பரப்புரை இயக்கத்திற்கு தஞ்சையில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாடு விடுதலை பெற்ற பிறகு படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே செல்கிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு கோடிக்கு மேல் வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்ற இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய ஒன்றிய மோடி அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை? என்று கேட்டு வேதாரண்யம், கன்னியாகுமரி, ஓசூர், சென்னை ஆகிய தமிழ்நாட்டின் நான்கு முனைகளிலிருந்து பரப்புரை இயக்கம் மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளில் புறப்பட்டு ஏப்ரல் 2 தியாகி பாலன் பிறந்தநாளில் திருச்சியில் ஒன்று கூடி மாபெரும் இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

மார்ச் 23  வேதாரண்யத்தில் இருந்த புறப்பட்ட பரப்புரை இயக்கத்திற்கு இளைஞர் பெருமன்ற மாநில துணைத் தலைவர் கு.ராஜேந்திரன் தலைமையில், தேசிய குழு உறுப்பினர் பவிதாரணி, மாநில துணை செயலாளர் துரை. அருள்ராஜ்,மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். கார்த்திகை செல்வன்.

மாணவர் பெருமன்ற மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டார் அடங்கிய பரப்புரை குழு திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பரப்புரை செய்து,. நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வந்து இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தது.

 தஞ்சைக்கு வந்த பரப்புரை இயக்கத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தஞ்சை மாவட்ட தலைவர் ச.சுதந்திர பாரதி ,மாவட்ட செயலாளர் க.காரல் மார்க்ஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி பயண குழுவினரை வாழ்த்தி வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய மோடி அரசு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை அளிப்போம் என்ற உறுதிமொழி அளித்து 8 வருடங்கள் முடிந்த பின்பும் வேலை வாய்ப்பு உறுதிமொழி நிறைவேற்றப் படவில்லை. மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக் கப்படுகின்றன, அவுட்சோர்சிங்,. ஒப்பந்த முறையில் பணிக்கு ஆள் எடுக்கப்படுகிறார்கள், நிலக்கரி, ரயில்வே, விமானம் , ஆயுத தளவாட உற்பத்தி, வங்கி , மின்சாரம், போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதனால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு என்பது கனவாகி வருகிறது. இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், வேலை வாய்ப்பு உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், பகத்சிங் தேசிய வேலை உறுதி அளிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வேலை கொடுக்கின்ற வரையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 45 வயதுக்குள் இறந்துவிட்ட இளைஞர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இருந்து புறப்பட்ட பரப்புரை இயக்கம் மேல உளூர்,. ஒரத்தநாடு , பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் வழியாக சென்று நெய்வேலியில் இரவு தங்குகிறது. நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் பரப்பரை பயணம் மேற்கொள்கிறது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் ஆர் பிரபாகர்,க. ஜார்ஜ் துரை, மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் பூமிநாதன் ,பி.செல்வி, பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினர் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை. சிவபுண்ணியம், மாவட்ட நிர்வாகிகள் கோ.சக்திவேல், என். பாலசுப்பிரமணியம், குணசேகரன், ராமலிங்கம்,தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரமோகன், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி, ஏ ஐ டி யு சி நிர்வாகிகள் சி. சந்திரகுமார்,வெ. சேவையா, தி.கோவிந்தராஜன், துரை..மதிவாணன், ஆர்.பி.முத்துக்குமார், பி.செல்வம், இரா.செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top