Close
நவம்பர் 22, 2024 9:14 காலை

வள்ளலார் முப்பெரும் விழா: மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை

வள்ளலார் முப்பெரும் விழா போட்டிகளை தொடக்கி வைத்து பேசிய வள்ளலார் மாணவர் இல்லத்தலைவர் மருத்துவர் ராமதாஸ்

புதுக்கோட்டையில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பாடல், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது

புதுக்கோட்டையில் 16.4.2023 அன்று வள்ளலார் முப்பெரும் விழா தமிழக அரசு அறிவிப்பின்படி, இந்து சமய அறநிலைத்துறைசார்பில் நடைபெற உள்ளதை முன்னிட்டு புதுக்கோட்டை நகரத்தார் திருமண மண்டபத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம் பாடல் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது .

புதுகேகோட்டை
பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவி

நிகழ்வை வள்ளலார் மாணவர் இல்லத் தலைவர் மருத்துவர் எஸ் ராமதாஸ் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட  இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் தி.அனிதா முன்னிலை வகித்தார்.  மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர் சு.கண்ணன் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இசை பள்ளி ஆசிரியை சு.பானுமதி ஜான்சிராணி, தனபால் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்தனர்.

புதுக்கோட்டைபோட்டியில் தேர்வு பெற்றவர்களுக்கு பரிசுகள் வள்ளலார் முப்பெரும்  விழாவில் வழங்கப்படவுள்ளது.  நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் குமார், பள்ளி துணை ஆய்வாளர் ஆர் வேலுச்சாமி,   இந்து சமய அறநிலைய துறை தலைமை எழுத்தர் ராமசாமி,  ஆய்வாளர் வி திவ்யபாரதி, செயல் அலுவலர் ரா. கார்த்திகேயன்,  பள்ளி கல்வித்துறைர் அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top