Close
செப்டம்பர் 20, 2024 3:52 காலை

நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை

நார்த்தாமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நார்த்தமலை கோவில் பின்புறம் உள்ள கோவில் திடலில் நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டில், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 -க்கும் மேற்பட்ட காளைகளும் அதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 -க்கும் மேற்பட்ட மாடுபுடி வீரர்களும் பங்கேற்றனர்.

வாடிவாசலில் இருந்து வரிசையாக  அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர்.  இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் சுற்றி விளையாட்டுக் காட்டி சென்றன.

இந்த ஜல்லிக்கட்டு விழாவினை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவானது நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதல், மாடுபிடி வீரர்களுக்கோ மாட்டுகளுக்கோ பரிசுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மாடுபுடி வீரர்களுக்கு உறுதி மொழி ஏற்கச்செய்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top