Close
நவம்பர் 22, 2024 12:30 மணி

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஏப்ரல் 11 -ல் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஏப்ரல் 11 -ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதென  ஏஐடியுசி தஞ்சை மாவட்ட ஆட்டோ சங்கம் தீர்மானித்துள்ளது.

ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் தலைமை யில்  தஞ்சாவூர் ஏஐடியுசி அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர், வழக்கறிஞர் சி.சந்திரகுமார், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் சிறப்புரை ஆற்றினர். சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில் நாதன், பொருளாளர் ஆர் மலைச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆனந்தராமன், நகரத் தலைவர் எஸ்ரமேஷ், நகர செயலாளர் கே.ராஜா, நகர பொருளாளர் எஸ்.கணேசன், நகர துணைச் செயலாளர் ஏ.பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தஞ்சை மாநகரில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் கட்டாயம் தலைக்கவசம் அணிய தஞ்சை மாநகரில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், காவல் துறையினர் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை அச்சுறுத்துகின்ற வகையிலும், மிகப்பெரிய காவல் படையை வைத்து இலக்கு நிர்ணயித்து வசூல் வேட்டை செய்வது போன்ற காவல்துறை நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை களை பொதுமக்கள் பின்பற்ற இணக்கமான முறையில் நடவடிக்கை க்கைகள் மேற்கொள்ள வேண்டும் என  மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறையை கேட்டுக் கொள்வது.

ஒன்றிய மோடி அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆட்டோ பயணம் அனைவருக் கும் பயன்படும் வகையிலும் , பொதுமக்களும் , ஆட்டோ தொழிலாளர்களும் பெருமளவிற்கு பயனடைவதோடு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் ஆட்டோ செயலியை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.

 ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளைத் தீர்க்க முத்தரப்பு குழு அமைக்க வேண்டும், நல வாரிய பதிவுகள்  ஆன்லைன் மூலம் செய்வதில் பெரும் செலவு ஏற்படுகிறது.

தொழிலாளர் துறையே ஆன்லைன் பதிவு முறையை ஏற்று செயல்படுத்த வேண்டும். 60 வயது நிறைவு பெற்ற அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூபாய் 9000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட பெட்ரோல், டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பாக வருகிற  11.4. 2023 காலை 10 மணிக்கு நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top