கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம் .
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு சர்வதேச குழந்தைகள் புத்தக நாள் கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாசித்து கொண்டாடினர்.
இந்நிகழ்வில் தன்னார்வலர் மாலினி வரவேற்றார். கந்தரவக்கோட்டை கிளை நூலகர் ராமசாமி முன்னிலை வகித்தார். இல்லம் தேடி கல்வி மைய ஒன்றியஒருங்கிங்ணைப் பாளர் அ.ரகமதுல்லா கலந்து கொண்ட பேசியதாவது:
சர்வதேச குழந்தைகள் புத்தக நாள் குறித்த பேசுகையில், சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் என்பது புத்தகங்களுக் கான சர்வதேச வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும். 1967 -ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த நாள் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் பிறந்த நாளான ஏப்ரல் 2 தினத்தை நினைவூட்ட அனுசரிக்கப்படு கிறது. இதுபோன்ற தினங்கள் குழந்தைகளுக்கான வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த மிகப்பெரிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறது.
நம்முடைய கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் 40,477 நூல்கள் இருக்கின்றன. மாணவ மாணவிகள் படித்து பயன்பெற வேண்டும் எனவும், மேலும் 70 மாத இதழ்களும், எட்டு தினசரி நாளிதழும் வருகின்றன. போட்டித் தேர்வு எழுதும் மாணவர்க ளுக்கு மிகுந்த பயனை அளிக்க கூடியதாக உள்ளது. அனைவரும் படித்து பயன்பட வேண்டும் என்றார் அவர்.
மாணவ, மாணவிகள் ராஜேந்திர சோழன் வெளியிட்ட எஸ். ஆர். செப்பேடுகள், சுதந்திரப் போரில் தமிழர் பங்கு, விடுதலைப் போரில் வீராங்கனைகள், மாமன்னர் மருதுபாண்டியர், பழந்தமிழர் நாகரிகம், வீரபாண்டிய கட்டபொம்மன், குரு கோவி சிங்கன், தாயின் மணிக்கொடி பாரீர், உலகில் தமிழ் இனம், தமிழக மராத்தியர் வரலாறு, சோழர் கால இலக்கியங்கள், சேகுவாரா உள்ளிட்ட வாசித்தனர். நிறைவாக தன்னார்வலர் சரஸ்வதி நன்றி கூறினார்.