Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

தென்னங்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே தென்னங்குடி முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை அருகே தென்னங்குடி அருள்மிகு  முத்துமாரியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழா வெகு விமரிசையாக  திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை இந்து அறநிலை துறை சம்பந்தமான புதுக்கோட்டை அருகே தென்னங்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழாவானது கடந்த ஞாயிற்றுக் கிழமை (24.3.2023) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து அலங்கரிக் கப்பட்ட தேரில் வைத்தனர்.  பின்னர் சுற்று வட்டார பகுதி யைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அரோகரா அரோகரா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு தேர் வடத்தினை இழுத்துச் சென்றனர். தேரில் அம்மன் அமர்ந்தவாறு பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.

இதில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்திச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top