Close
நவம்பர் 25, 2024 6:17 காலை

புதுகை அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2022-23 ஆண்டுக்கான  தற்காப்பு கலை பயிற்சி வழங்கும் முகாம் நடைபெற்றது.

மத்திய கல்வி அமைச்சக திட்ட  ஏற்பணிப்புக்குழு ஒப்புதலின் படி ,  ராணிலட்சுமிபாய் ஆத்ம ரக்சா பிரசிக்ஷான் (Rani Lakshmi Bai atma raksha Prashikshan  –Elementary and Secondary – self defence training )  என்ற தலைப்பின் கீழ் 6744 அரசு நடுநிலைப் பள்ளி களில் 6 -ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும் 519 உயர் நிலை / மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும், தமிழகம் முழுவதும் தற்காப்பு கலை பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தற்காப்பு கலை பயிற்சி மூலமாக பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கவும் இடைநிற்றலை தவிர்த்து இடையில் இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை தொடர் வதற்கு , கராத்தே, ஜூடோ, சிலம்பம், தேக்வாண்டோஆகிய தற்காப்பு கலைகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை தருகிறது.
தன்னம்பிக்கையை தருவதால் மாணவிகளின் பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக தற்காப்புகளை பயிற்சி அமைகிறது.எனவே, மத்திய மாநில அரசுகள் இந்த பயிற்சியினை பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழகம் முழுதும் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தற்காப்பு கலை பயிற்சி புதுக்கோட்டை மாவட்டத்தில்
நடுநிலைப் பள்ளிகள் 287 மேல்நிலைப் பள்ளிகள்199 ஆக மொத்தம் 486 பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.திருவப்பூர் நகராட்சி உயர் நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவிகள் தற்காப்புகலை   பயிற்சியாளர் புத்தாஸ் வீர கலை கழகத்தின் நிறுவனர், பயிற்றுனர்  சேது கார்த்திகேயன்  முன்னிலையில் பயிற்சிக பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top