Close
நவம்பர் 22, 2024 2:14 மணி

குமரமலை பாலதெண்டாயுதபாணி கோயிலில்  பங்குனி  உத்திரவிழா

புதுக்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் குமரமலை தண்டாயுதபாணி

புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில்  பங்குனி  உத்திர விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில்   முருகப் பெருமானுக்கு  சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை அருகிலுள்ள குமரமலை ஸ்ரீ பாலதண்டாயுத பாணி கோவிலில்  பங்குனி  உத்திர விழாவை முன்னிட்டு விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடை உடுத்தி பால்குடம் ஏந்தியும்  கரும்புத் தொட்டிலில்  குழந்தை யை  ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

புதுக்கோட்டை
குமரமலையில் திரண்ட பக்தர்கள்

ஆலயத்தில்   ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு , பாலபி ஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு மலர் அலங்காரத்தில்  தீபாராதனை  நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன .

விழா ஏற்பாடுகளை பாலாஜி சிவாச்சாரியார் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.  விழாவில், பொதுமக்கள், பக்தர்கள் திரளானோர்    வழிபட்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top