Close
நவம்பர் 22, 2024 4:48 மணி

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடக்கம் : புதுக்கோட்டை மாவட்டத்தில் 24,439 பேர் பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதும் மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (6.4.2023)  தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 24,439 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 1052 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை,

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2022  இன்று தொடங்கி 30.04.2022 வரை நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 25,504 பேர் தேர்வு எழுதவுள் ளனர்.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்டங்களில் 119 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 02-தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 190 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 11 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில்  புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 6,900 மாணவர்கள், 7,433 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 181 பேரும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 5,442 மாணவர்கள், 5,634 மாணவிகள் தனித்தேர்வர்கள் 91 பேரும் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை
புதுகையில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதும் மாணவிகள்

இதில், வியாழக்கிழமை(ஏப்.6) முதல்  நடைபெற்ற தமிழ் பாடத்தேர்வில் மாவட்ட அளவில் மாணவர்கள் 11,896 பேரும், மாணவிகள் 12,543 பேர்  தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 24,439 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். மொத்தம் 1052 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வுகளை சுமுகமான முறையில் நடத்திட தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்வசதி, கழிவறை வசதி, மின்வசதி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக தேர்வுகளை நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர்கள் அனைவரும் தங்களது கல்வியில் முழு கவனம் செலுத்தி தேர்வில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளை கூறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top