Close
நவம்பர் 22, 2024 7:16 காலை

புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் புனித வெள்ளி பிரார்த்தனை

புதுக்கோட்டை

புதுகை மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி பிரார்த்தனை

புனித வெள்ளி முன்னிட்டு சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் முழங்கால் முத்தமிடும் நிகழ்வு புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இயேசு கிறிஸ்து உயிர் தியாகம் செய்த புனித வெள்ளி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவு கூர்கின்றார்கள்.
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவரு டைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற விழாவாகும்.

கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்தஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறிஸ்தவ தேவாயலங்களில்  சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த பிப்ரவரி மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப் படுகிறது.

இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இதன்படி கடந்த  ஏப்.2 -ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (ஏப்.7) புனித வெள்ளி கடை பிடிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. இதில் சிலுவையில் இயேசு அறையப்பட்ட போது அவர் பேசிய 7 வார்த்தைகளை கிறிஸ்தவர்கள் தியானம் செய்தனர். மேலும், அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை
புதுகை மார்தாண்டபுரம் தேவாலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்

மேலும், பல்வேறு இடங்களில் இயேசுபிரான் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குத் தந்தை சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின் தொடர்ந்து சென்றனர்.

சிலுவைப்பாடு பேரணி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று இறுதியில் தேவாலயத்தில் நிறைவு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 9-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

புதுக்கோட்டையில்… மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை சபரிநாயகம் தலைமையில் புனிதவெள்ளி கூட்டு திருப்பலி நடைபெற்றது. இந்த கூட்டு திருப்பலியின் பொழுது சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதரின் உருவத்தை பங்குத்தந்தை திறந்து வைத்து ஜெபம் செய்தார்.

பின்னர் இறை பாடல்கள் பாடிபிறகு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்ப கிறிஸ்தவர்கள் ஆலய பணியாளர்கள் எடுத்துச் சென்ற பத்துக்கு மேற்பட்ட சுருவத்திற்கு முழங்கால் முத்தமிட்டு வழிபாடு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top