Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கல்

ஈரோடு

கோரியில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை விநியேகித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலா ளரான. கே ஏ செங்கோட்டையன் தலைமை வகித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம்,  அந்தியூர், பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்ப டையில், செயற்குழுவைக் கூட்டி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் தேர்தல் ஆணையத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

அதிமுகவை பொறுத்தவரை ஒரே தலைமை என்ற முறையில் கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு ள்ள பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுகவில் புதிதாக உறுப்பினர் சேர்க்கையை நேற்று முதல் முதலாக தொடங்கி வைத்தேன். அதிமுகவை இனி தமிழகத்தில் அசைக்க முடியாது என்பதை இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் உருவாக்கி காட்டுவோம்.வருகிற 2026 தேர்தலில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய இருக்கிறது

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உறுப்பினர் சேர்க்கைக் கான பணிகள் என்று துவக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒரே நிலையில்  நின்று பணிகளை நிறைவேற்றும் போது, தமிழ் மண்ணிலே எவராலும் அதிமுகவை அசைத்து விட முடியாது என்ற வரலாற்றை படைக்கப் போகின்றோம்.

காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ வேதனை தீர்த்தவன் நீ விழிகளில் நிறைந்தவன் நீ வெற்றி திருமகன் நீ என்ற வரலாற்றை தமிழகத்தில் எடப்பாடி அவருடைய தலைமையில் உருவாக்குவோம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி என்று கூறிவரும் நிலையில், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் ஆட்சி அமையும் என்று பாஜகவினர்கள் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதிமுக ஆட்சி அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர் இருவரையும் சந்திப்பது குறித்த கேள்விக்கு, கருத்து சொல்ல விரும்பவில்லை.

.2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியா அல்லது எந்தவிதமான கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம். அதில் எந்த குழப்பமும் இல்லை.

ஒரு தொகுதியில் குறைந்தது 75,000 உறுப்பினர்களை சேர்த்த வேண்டும் என்பது எங்கள் இலக்கு, குறைந்தது 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு. அதற்காக நாம் அனைவரும்  அயராமல் பாடுபடுவோம் என்றார் செங்கோட்டையன்.

நிகழ்ச்சியில்,  எம்எல்ஏ பண்ணாரி, முன்னாள் எம்பி சத்தியபாமா, யூனியன் சேர்மேன் மகுடீஸ்வரன், நகர செயலாளர் பிரினியோகணேஷ், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், எம்ஜிஆர் மன்றம் அருள் ராமச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், நகர் மன்ற உறுப்பினர்கள் முத்து ரமணன் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top