ஈரோடு சி எஸ் ஜ திருச்சபை ஆலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
உயிர்ப்பு ஞாயிறு, ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது, இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33 -ஆம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்து எழுந்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்
இயேசுபிரான் கடந்த புனித வெள்ளி அன்று மரித்தார். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த நிலையில், மூன்றாம் நாளான ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தார்.
அந்த உயிர்த்தெழுதலை கொண்டாட விதத்தில் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள சிஎஸ்ஜ திருச்சபை ஆலயத்தில் தலைமை போதகர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்தப் பிரார்த்தனையில் ஈரோடு மட்டுமன்றி அருகாமையில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.