Close
நவம்பர் 22, 2024 3:27 மணி

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

ஈரோடு

மாரத்தான் . போட்டியை பள்ளியின் தலைவரும் பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே .சி . கருப்பணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த ஒத்த குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியின் சார்பாக நீர் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோபி முத்து மஹாலில்  தொடங்கி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி வரை 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த மாரத்தான் போட்டி நடந்தது .

பள்ளியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி. கருப்பணன், கோபி டிஎஸ்பி சியாமளா தேவி கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை,தொடக்கி வைத்தனர்.

பள்ளியின் நிர்வாக இயக்குனர்கள் செங்கோட்டையன், ஜோதிலிங்கம், மோகன் குமார், பள்ளி முதல்வர் ராஜேஷ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளியில் இருந்து வந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். போட்டியின் ஒன்பது கிலோமீட்டர் தூரத்தை கடந்து முதல் இரண்டு இடங்களை மாணவிகளே பிடித்தனர் என்பது போட்டியின் சிறப்பம்சமாகும். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top