ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நலவாரியத்தின் புதிய உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டை மற்றும் பனை தொழிலாளர்களுக்கு பனையேறும் உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கோபியிலுள் உள்ள சீதா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு, ஈரோடு மாவட்ட தொழிலாளர் துணை ஆணையாளர் முருகேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம் கலந்து கொண்டார்.
விழாவில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவரும், சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவருமான எர்ணாவூர் ஏ. நாராயணன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளையும், பனையேறும் தொழிலாளர்களுக்கு பனையேறும் உபகரணங்களையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுவருகின் றனர். பனை தொழிலாளர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் நகர்மன்ற உறுப்பினர் விஜய் கருப்புசாமி துறை சார்ந்த அலுவலர்கள், நிர்வாகிகள் உட்பட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.