Close
நவம்பர் 21, 2024 3:11 மணி

ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தமிழ்நாடு உன்னால் முடியும் ஓட்டுனர் நல சங்கம் சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசுகிறார், போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மணி

புதுக்கோட்டையில் தமிழ்நாடு உன்னால் முடியும் ஓட்டுனர் நல சங்கம் சார்பில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் தமிழ்நாடு உன்னால் முடியும் ஓட்டுனர் நல சங்கம் சார்பில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மாநிலத் தலைவர் சத்யா தலைமையில்  நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக புதுக்கோட் டை போக்குவரத்து ஆய்வாளர் தமிழ்மணி கலந்து கொண்டு  பேசுகையில்,  ஓட்டுநர்கள் அனைவரும் முறையாக சீருடை அணிந்து ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும்

விபத்துகளை தவிர்க்கும் விதமாக சாலை விதிமுறை களை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் தங்கள் குடும்பம் மட்டுமின்றி தங்கள் வாகனத்தில் வரும் குடும்பங்களும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது

எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை  ஓட்டுனர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றார் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தமிழ்மணி. .

இதனையடுத்து தமிழ்நாடு உன்னால் முடியும் ஓட்டு நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இக்கருத்தரங்கில் நல சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top