Close
நவம்பர் 22, 2024 3:09 மணி

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

புதுக்கோட்டை

நார்த்தாமலையில் நடைபெற்ற பங்குனி தேரோட்டம்

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். வற்றாத ஆகாய கங்கை, அருமை குளம், ஜம்புகேசுவரர் சுனை, பொழுதுபடா சுனை ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் அமைந்த பெருமை வாய்ந்தது. நாரதமுனி அம்பாளை வழிபட்ட மகிமையால் நாரதர் மலை என்ற இத்தலம் மருவி தற்போது நார்த்தாமலை என அழைக்கப்படுகிறது.

இப்புண்ணிய தலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு கடந்த மார்ச்.26 -ஆம் தேதி இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது, தொடர்ந்து 2.4.2017 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டு மற்றும் கொடியேற் றத்துடன் பங்குனித்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 11.4.2017 -ஆம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறு கிறது.

விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் மண்டகப்படியும், அன்னவாகனம், ரிஷபவாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது. விழாவி்ன் முக்கிய நிகழ்வாக ஏப்.10 -ஆம் தேதி (திங்கள்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம். (உள்படம்) அம்மன்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதி யாக மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. மேலும், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.11) நாட்டு சலவைத் தொழிலாளர்களின் மண்டகப்படியைத் தொடர்ந்து அம்மன் வீதியுலாவும், காப்புக் களைதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதா பாண்டே, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி,  குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்(கூபொ) சூரியநாரயணன், உதவி ஆணையர் தி. அனிதா, செயல் அலுவலர்  ச. முத்துராமன், கோவில் ஆய்வர் யசோதா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை, புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறையினர், விழாக்குழுவினர், மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top