புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்கோயிலில் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ,கடந்த ஒரு வாரகாலமாக தினமும் ஆன்மீகச் சுடர் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச சுந்தர்ராஜ பாகவதர் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் நடைபெற்றது.
ஸ்ரீ இராமர் ஜனனம்- யாகம் காத்த இராமன் தலைப்பில் சுந்தர்ராஜ பாகவதர் உரை ஆற்றினார். 08.04.23 அன்று நிறைவு நாளில் சீதா இராமன் பட்டாபிஷேகம் நடந்தது .
நிகழ்வில் சுந்தர்ராஜ பாகவதர் உபன்யாசத்துடன் பல்வேறு சிறப்பு பூஜையும் , சிறுவர், சிறுமிகளின் பக்தி பாடல் நிகழ்ச்சியும், மாணவிகளின் பாரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் இராமர் சீதை உற்சவர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை சிறப்பு வழிபாடு நடந்தது. தொடரந்து தினமும் நடந்த ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் சொற்பொழிவை பக்தி பாடலில் வழங்கிய சுந்தர்ராஜ பாகவதர்க்கு இலக்கிய பேரவை நிர்வாகி நிலவை பழனியப்பன் விருது வழங்கி பாராட்டினார்.
.இதில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள், அனுமன் திருச்சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, மணிக் குருக்கள் மற்றும் அனுமன் திருச்சபை யினர், ஆன்மிக நெறியாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வா கிகள் சிறப்பாக செய்திருந்தனர் ,