Close
நவம்பர் 22, 2024 1:28 மணி

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிர் மருத்துவ நடமாடும் வாகனம்: புதுக்கோட்டை ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன நடமாடும் பயிர் மருத்துவ முகாம் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு துவக்கி வைத்தார்.

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன நடமாடும் பயிர் மருத்துவ முகாம் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தொடக்கி வைத்தார்.
எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடமாடும் பயிர் மருத்துவ முகாம் வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது. பெருங்களூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் இந்த வாகனத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தொடக்கி வைத்தார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்  பங்கேற்று, நடமாடும் பயிர் மருத்துவ முகாம் வாகன செயல்பாடுகளை பொதுமக்கள், விவசாயிகளிடம் விளக்கி பேசியதாவது:

புதுக்கோட்டை
போஸ்டரை வெளியிட்ட ஆட்சியர்

பயிர் மருத்துவ முகாம், பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய், நுண்ணூட்ட சத்து குறைபாடு போன்றவைகளை பயிற்சி பெற்ற பயிர் மருத்துவர்கள் நுண்ணோக்கி மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்கள் உதவியுடன் துல்லியமாக கண்டறிந்து உரிய பரிந்துரைகளை வழங்குவார்கள்.

பரிந்துரைகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத அந்தந்த பகுதியில் கிடைக்கக்கூடியதாக இருக்கும். இந்த நடமாடும் பயிர் மருத்துவ வாகனம் விவசாயிகளின் தோட்டங்களுக்கே நேரடியாக சென்று பயிர்களில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து உரிய தீர்வுகளை வழங்கும். இதனால் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் செலவு குறையும். விளைச்சல் மற்றும் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றார் ராஜ்குமார்.

புதுக்கோட்டை
நடமாடும் வேலாண மருத்துவமனையை தொடக்கி வைத்த ஆட்சியர் கவிதா ராமு

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர். நா. கவிதப் பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எம்.ரவிச்சந்திரன், முன்னோடி விவசாயி ஜி.எஸ்.தனபதி,

புதுக்கோட்டை

மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் கே. சதாசிவம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் எம். வீரமுத்து. புதுக்கோட்டை வேளாண் துறை உதவி இயக்குனர், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வேளாண் அலுவலர். எஸ். முகமது ரபி ஆகியோர் பங்கேற்றனர்.  நிகழ்வை, எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர். விமலா மற்றும் பயிர் மருத்துவ தொழில்நுட்ப அலுவலர்கள் ஏ. கோபால் ஆகியோர்  ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top